கோவில்களில் சமபந்தி விருந்து
திருப்பூர்; முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாள் முன்னிட்டு திருப்பூர் விஸ்வேஸ்வரர் சுவாமி கோவிலில் நேற்று பகல், சமபந்தி விருந்து நடந்தது.
அறநிலையத்துறையினர், கட்சியினர் பொதுமக்கள் பங்கேற்றனர். காங்கயம், சிவன்மலை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலில், நடந்த சமபந்தி விருந்தில் கோவில் உதவி கமிஷனர் ரத்தினாம்பாள் மற்றும்வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. இதில், கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார், அறங்காவலர்கள் பொன்னுச்சாமி, விஜயகுமார், கவிதாமணி உட்பட பலர் பங்கேற்றனர். பொது விருந்தில், 300 பக்தர்கள் பங்கேற்றனர்.
பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். செயல் அலுவலர் வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.