அண்ணாதுரை படத்துக்கு மலரஞ்சலி

திருப்பூர்; மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாள் திருப்பூரில் அனுஷ்டிக்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள அண்ணாதுரை சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் துாவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ், மாவட்ட நிர்வாகிகள் நடராஜன், தங்கராஜ், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாநகராட்சி சந்திப்பு பகுதியில், அலங்கரித்து வைத்திருந்த அண்ணாதுரை படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.,குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அவிநாசி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் தலைமையில் கருவலுார், மாரியம்மன் கோவில் முன், அண்ணாதுரை படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட ஜெ., பேரவை துணைத்தலைவர் காத்தவராயன், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் திரிபுரசுந்தரன், ஜெ.,பேரவை ஒன்றிய இணைச் செயலாளர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement