விவசாயத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
அவிநாசி; அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் ஆறு வாரங்களுக்கும் மேல் பாக்கியுள்ள 1056 கோடி ரூபாய் கூலி பாக்கியை வழங்க வேண்டும். வேலைக்கு வரும் அனைவருக்கும் தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமையில், துணை செயலாளர் பழனிச்சாமி, துணை தலைவர் குருநாதன், ஒன்றிய நிர்வாகி பொன்னுச்சாமி முன்னிலையில் கோரிக்கைகள் விளக்கப்பட்டது.
மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம், மாவட்ட தலைவர் சண்முகம், சி.ஐ.டி.யு., பொது தொழிலாளர் சங்க செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி, கட்டுமான சங்க மாவட்ட துணை தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.