மாடு வரத்து குறைந்தது  

அமராவதிபாளையத்தில் கடந்த வாரம் நடந்த சந்தைக்கு 908 மாடுகள் வந்தன. நேற்று நடந்த சந்தைக்கு 874 மாடுகள் மட்டுமே வந்தன. கன்றுக்குட்டி, 6,000 - 7,000, காளை, 23 ஆயிரம் - 28 ஆயிரம், எருமை 28 ஆயிரம் - 31 ஆயிரம், பசுமாடு 30 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. சுபமுகூர்த்தம், அடுத்தடுத்த விசேஷங்களால், மாடு வரத்து குறைந்தது. கேரள வியாபாரிகளும் குறைவாகவே வந்தனர். நேற்று, 1.25 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது என சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement