முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க திட்டம்

திருப்பூர்; 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்கிற புதிய திட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க, ஒரு கோடி ரூபாய் வரை வங்கி கடன் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும்; 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் விதவை பெண்கள், திருமணம் ஆகாத மகள் மற்றும் விதவை மகள் ஆகியோர் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளம், அறை எண், 523ல் செயல்படும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். 0421 2971127 என்ற எண்ணிலோ அல்லது exweltup@tn.gov.in என்கிற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பி தொடர்பு கொண்டு, விருப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்கலாம்.

Advertisement