குடிநீர் வினியோகம் குறைந்தது

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 4வது குடிநீர் திட்டத்துக்கான மேட்டுப்பாளையம், சமயபுரம் நீர் தேக்கி வைக்கும் பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் வரும் 20ம் தேதி வரை நடைபெறும்.

இதனால், இத்திட்டத்தில் பெறப்படும் குடிநீர் அளவு குறைந்துள்ளது. 3வது திட்டத்தில் கூடுதல் குடிநீர் பெறப்படுகிறது. இப்பணி முடியும் வரை, 4வது திட்டத்தில் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் குடிநீர் அளவு குறையும். குடிநீர் வினியோகம் செய்யும் கால அவகாசம் அதிகரிக்கும். குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement