சென்னையில் சாலையில் கிடந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி; போலீசார் ஷாக்

3

சென்னை; சென்னையில் சாலையில் ஏ.கே., 47 துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


சென்னை ராமாபுரத்தில் பிரபல மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள சிக்னல் அருகே சாலையில் ஏ.கே. 47 ரக துப்பாக்கியும், 30 தோட்டாக்களும் கிடந்துள்ளது. இதை கண்ட சிவராஜ் என்பவர் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளார்.


ஏகே 47 ரக துப்பாக்கி எப்படி வந்தது, யாராவது வீசிச் சென்றனரா, ஏதேனும் சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டதா உள்ளிட்ட விவரங்களுக்காக அதன் உண்மைத்தன்மை குறித்து தடயவியல் ஆய்வுக்கு போலீசார் அனுப்பி இருக்கின்றனர்.


துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சாலையில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement