திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் போராட்டம்: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் கைது
சென்னை: திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் அறப்போராட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுக்கும் நோக்கத்துடன், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மடத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று மதுரை ஆதினத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
@1br@திருப்பரங்குன்றம் மலை முருகப் பெருமானுக்கு சொந்தமானது. அதில் அமைந்துள்ள தர்கா ஒன்றை காரணம் காட்டி, மலையில் ஆடு, கோழி வெட்ட இஸ்லாமிய அமைப்பினர் முயற்சிக்கின்றனர். இதற்கு பக்தர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்து முன்னணி சார்பில், இன்று திருப்பரங்குன்றம் மலையை காக்கும் அறப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதை தடுக்கும் நோக்கத்துடன், போலீசார், மாநிலம் முழுவதும் கைது, வீட்டுக்காவல் நடவடிக்கை எடுத்து பா.ஜ., இந்து முன்னணி தொண்டர்களை அடைத்து வைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், நுாற்றுக்கணக்கான தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்.
நெல்லையில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றால நாதன் கைது செய்யப்பட்டார். வெவ்வெறு இடங்களில் ஊர்வலமாகவும், தனித்தனியாகவும் திருப்பரங்குன்றம் புறப்பட்ட ஆயிரக்கணக்கான பா.ஜ., இந்து முன்னணி தொண்டர்கள், ஆங்காங்கே மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தடை !
திருப்பரங்குன்றத்தில் போராட்டம் அறிவிப்பு எதிரொலியாக, மடத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று மதுரை ஆதினத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
வாசகர் கருத்து (13)
Ram Rav - ,
04 பிப்,2025 - 15:08 Report Abuse
போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும் கைது செய்யப் படுபவர்களையும் கட்சிகள் இயக்கங்கள் பெயர்களைக் கூறாமல் இந்துக்கள் என்றே குறிப்பிட வேண்டும் என்று வேண்டுகிறேன்.
0
0
Reply
ஆரூர் ரங் - ,
04 பிப்,2025 - 15:04 Report Abuse
ஜவாஹிருல்லா சவுண்டைக் காணோம். வழக்கம் போல அந்நிய செலாவணி திரள் நிதி சேர்க்கப் போய விட்டாரா?.
0
0
Reply
saravanan - chennai,இந்தியா
04 பிப்,2025 - 15:03 Report Abuse
பாஜகவினர் போராட முற்பட்டாலே வீட்டு சிறையில் அடைக்கப்படுவது இந்த அரசின் அடக்குமுறை மனப்பான்மை மற்றும் ஏகாதிபத்திய சித்தாந்தையே காட்டுகிறது வழிபாட்டு தலங்களின் புனிதம் எக்காரணம் கொண்டும் ஒருசில மத அடிப்படை வாதிகளால் சீர்கேடு அடையக் கூடாது என்பதற்காக இந்து அமைப்புகளால் நடத்தப்படும் இந்த அறப்போராட்டத்தை அரசாங்கம் நசுக்க நினைப்பது எமர்ஜென்சியை விட கடுமையானது.
0
0
Reply
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
04 பிப்,2025 - 14:44 Report Abuse
ஆட்சியில் இருந்த மக்கள் கவனத்தைத் திசை திருப்பிட்டோம்ல ?? அடுத்ததா கலவரத்தை உண்டாக்கிட்டு பாஜக மேலயும் பழி போட்டுருவோம் ...
0
0
Reply
ஆரூர் ரங் - ,
04 பிப்,2025 - 14:34 Report Abuse
குவாரி? எந்த மலை கண்ணில் பட்டாலும் அதை குவாரிக்கான வாய்ப்பாக மட்டுமே பார்ப்பது திராவிஷக் கண்ணோட்டம். இப்போது இந்த மலையின் மீது அவர்களுக்கு ஒரு கண். முருகா காப்பாற்று
0
0
Reply
Nandakumar Naidu. - ,
04 பிப்,2025 - 14:33 Report Abuse
கேடு கெட்ட போலீஸ். போலீசில் இருக்கும் ஹிந்துக்களுக்கு ரோஷம், ஈனம், மானம், சூடு, சொரணை இருக்காதா.?
0
0
Reply
raju - Madurai,இந்தியா
04 பிப்,2025 - 14:16 Report Abuse
ஸ்டாலின் தேவை இல்லாமல் பிஜேபி யை வளர்த்து விடுகிறார்
0
0
Reply
Jegadees - Tirunelveli,இந்தியா
04 பிப்,2025 - 14:12 Report Abuse
வெற்றிவேல் வெற்றிவேல்
0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
04 பிப்,2025 - 14:09 Report Abuse
எவண்டா சொன்னது தீம்க்கா இந்துக்களுக்கு எதிரியில்லை என்று? நீக்கப்பட வேண்டிய காட்டாட்சி நடக்கிறது.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement