செய்தியாளர்களை துன்புறுத்தக் கூடாது: போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

4

சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவான எப்.ஐ.ஆர்., 'லீக்' ஆனது குறித்த விவகாரத்தில், செய்தியாளர்களை துன்புறுத்தக்கூடாது என போலீசுக்கு உத்தரவிட்டு உள்ள ஐகோர்ட், சராமரியாக கேள்வி எழுப்பி உள்ளது.


சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவான, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை, 'லீக்' ஆனது. இது குறித்து, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அந்த எப்.ஐ.ஆர்., நகலை, சி.சி.டி.என்.எஸ்., எனப்படும் குற்றம் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் எனப்படும், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தவர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி விசாரித்து வருகின்றனர்.அந்த வரிசையில், குற்றங்கள் தொடர்பாக செய்தி சேகரித்து வரும், 'கிரைம்' பிரிவு செய்தியாளர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில், மூன்று பேரின் மொபைல் போன்களை பறிமுதல் செய்துஉள்ளனர். இதுதொடர்பாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம், சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.


இதனை எதிர்த்து செய்தியாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட், செய்தியாளர்களை போலீசார் துன்புறுத்தக்கூடாது. அவர்களிடம் பறிமுதல்செய்த மொபைல்போனை திருப்பி ஒப்படைக்க வேண்டும். செய்தியாளர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், விசாரணையின்போது குடும்ப விவரங்களை போலீசார் ஏன் கேட்க வேண்டும். ?பத்திரிகையாளர்களுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பியது ஏன்? எப்ஐஆர் கசிவு தொடர்பாகவேறு யாரை விசாரித்தீர்கள் ? எப்ஐஆர் இணையத்தில் பதிவேற்றம் செய்தது யார்?கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை விசாரித்தீர்களா ?அவரது வாக்குமூலம் எங்கே?
என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

Advertisement