கும்பமேளாவில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர்
பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி புனித நீராடுகிறார்.
அதிகாரிகள் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, பிரதமர் மோடி காலை 10:00 மணிக்கு பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் தரையிறங்குவார், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நைனியில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளி மைதானத்தை அடைவார்.
காலை 10:45 மணிக்கு, அவர் அரேல் காட் சென்றடைவார், பின்னர் சங்கமத்திற்கு படகு சவாரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை, மோடி சுமார் அரை மணி நேரம் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா கும்ப மேளா, ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் உலகம் முழுவதிலிருந்து கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (5)
ஆரூர் ரங் - ,
04 பிப்,2025 - 21:58 Report Abuse
பிரதமர நீராடுவதைப் பார்த்து பரவசமாகி ஓட்டு போடுமளவுக்கு டெல்லி மக்கள் முட்டா கள் இல்லை 90% கல்வி அறிவுள்ளவர்கள்தான். அவர் புனித நீராடுவது அவரது சொந்த விஷயம்.
0
0
Reply
அப்பாவி - ,
04 பிப்,2025 - 20:58 Report Abuse
சுத்தி இருக்குற 18 பட்டியிலும் ஆட்களை அடிச்சு முடக்கி இவர் புனித நீராடுவார். ஏழைகளின் கஷ்டம் எதிர்க்கட்சிகளுக்கு புரியாதுன்னு அடிச்சு உடுவார்.
0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
04 பிப்,2025 - 20:18 Report Abuse
தில்லி தேர்தலில் ஓட்டுக்கள் குவியும் தாமரைக்கே .......
0
0
Reply
Narayanan Muthu - chennai,இந்தியா
04 பிப்,2025 - 20:00 Report Abuse
தில்லி தேர்தல் நாளன்று ஒரு சிறப்பு காட்சி. தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரம். பொழப்பு. நேர்மையான தேர்தல் ஆணையமாக இருப்பின் இவரின் இந்த நாடகத்தை தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப கூடாது என தடை விதிக்க வேண்டும். கள்ள கூட்டணி தேர்தல் ஆணையம் இதை செய்யாது.
0
0
N Sasikumar Yadhav - ,
04 பிப்,2025 - 21:55Report Abuse
ஓட்டுப்பிச்சைக்காக திருத்தணியில் வேல் தூக்கியது உங்க எஜமான் கோபாலபுர திராவிட மாடல் தலிவரு . ஞாபகம் இருக்கிறதா
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement