இரண்டாவது சுற்றில் மாயா, அன்கிதா
மும்பை: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் மாயா ரேவதி, அன்கிதா, ராஷ்மிகா முன்னேறினர்.
மும்பையில் பெண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, சக வீராங்கனை வைஷ்ணவியை எதிர்கொண்டார். இதில் அன்கிதா 6-2, 6-2 என நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்ற போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரஷ்யாவின் பிரதான்கினாவை 6-1, 6-0 என்ற நேர் செட்டில் எளிதாக வீழ்த்தினார். தகுதிச்சுற்றில் இருந்து பிரதான சுற்றுக்கு முன்னேறிய மாயா ரேவதி, முதல் சுற்றில் பிரிட்டனின் மியாஜகியை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-1 என வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement