கணவர் தற்கொலை அதிர்ச்சியில் மனைவியும் சாவு இரு குழந்தைகள் தவிப்பு

கம்பம்:தேனி மாவட்டம் கம்பத்தில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கணவர் மனோஜ் 32,தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்த மனைவி தீபிகா 24, வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்தார். பெற்றோரை இழந்து இரு குழந்தைகள் தவிக்கின்றனர்.

கம்பம் கோம்பை ரோட்டை சேர்ந்த கூலி தொழிலாளி மனோஜ் . மனைவி தீபிகா. இவர்களுக்கு 7 வயதில் மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர். மனோஜ் கண் பார்வை குறைபாடு , உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இவரது மனைவிக்கும் வலிப்பு நோய் இருந்துள்ளது. வேலைக்கு செல்ல முடியாததால் மனோஜ் மன உளைச்சலுக்கு ஆளானார். நேற்று முன்தினம் மாலையில் அரளிவிதையை தின்றுள்ளார். கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர் இறந்தார். இதைக்கேட்டு தீபிகாவிற்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரும் இறந்தார். குழந்தைகளை தவிக்க விட்டு தந்தையும், தாயும் ஒரே சமயத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement