அலைபேசி செயலியில் டாக்டர்கள் வருகை பதிவு

விருதுநகர்:தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தற்போது ஆதார் பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு வருகை பதிவேடு கணக்கிடப்படுகிறது. இதை மேலும் எளிதாக்க அலைபேசி செயலியை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதற்காக என்.எம்.சி., செயலி உருவாக்கப்பட்டது.

இச்செயலி ஜன. 31ல் இருந்து செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதில் டாக்டர்களின் ஆதார் பயோமெட்ரிக் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர், பாஸ்வேர்டு பதிவு செய்து முகப்பதிவு மூலம் வளாகத்தில் 30 மீட்டருக்குள் இருந்து வருகையை பதிவு செய்து கொள்ள முடியும்.

Advertisement