பழனி முருகன் கோவிலில் இன்று கொடியேற்றம்
பழனி:திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா பெரியநாயகி அம்மன் கோவிலில் துவங்க உள்ளது.
இதையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று கொடி மண்டபத்தில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசுவாமி எழுந்தருள்வார். பின், காலை 10:50 மணிக்கு மேல் காலை 11:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. இரவு, புதுச்சேரி சப்பரத்தில் ரதவீதி உலா நடக்கும்.
பிப்., 14ல், கொடி இறக்குதலுடன் திருவிழா முடிவடைகிறது. விழா நாட்களில் பல வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement