கல்லுாரியில் பல்திறன் போட்டி

சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் இயற்பியல் துறை சார்பில் மாணவர்களுக்கான பல்திறன் போட்டி நடந்தது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 12 கல்லுாரிகள் பங்கேற்றன.

கல்லுாரி துணை முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் ஜெய்சங்கர் வரவேற்றார். இயற்பியல் தொடர்புடைய கட்டுரைகள், ஓவியம், ரங்கோலி, வினாடி வினா மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

மதுரை தியாகராஜர் கல்லுாரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. முதல்வர் வெங்கடேசன் பரிசுகள் வழங்கினார். உதவி பேராசிரியர் லட்சுமி காந்தன் நன்றி கூறினார்.

Advertisement