பிப்.7 தொழில் முனைவோர் முகாம்

மதுரை: மதுரை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: கிராமப்புற தொழில் முனைவோருக்கு தொழில் தொடர்பான சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் சிக்கந்தர் சாவடி வேளாண் உணவு வர்த்தக மையத்தில் பிப். 7 காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. டி.என்., - ரைஸ் மகளிர்புத்தொழில் கவுன்சில் நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

பான் கார்டு, டான், உத்யம் சான்றிதழ், உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ், ஜி.எஸ்.டி., டிரேட் மார்க், காப்புரிமை தாக்கல், ஆயுஷ் சான்றிதழ் பதிவு, கடன் வசதி இணைப்பு, பேக்கேஜிங், லேபிளிங் உதவிக்கான சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement