செந்நாய் கடித்து புள்ளிமான் பலி

உசிலம்பட்டி: மேற்கு மலைத் தொடர் உசிலம்பட்டி பகுதியில் கரடி, செந்நாய், மான், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசிக்கின்றன. வத்தலக்குண்டு ரோட்டில் நடுப்பட்டி கிராமத்தின் மேற்கே மலையடிவார வனப்பகுதியில் செந்நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்துடன் தப்பி ஓடி வந்த 3 வயது ஆண் புள்ளி மான், குபேந்திரன் என்பவரின் தோட்டத்தில் விழுந்து பலியானது.

உசிலம்பட்டி வனவர் வீமராஜா, வனக் காப்பாளர்கள் தெய்வலட்சுமி, கார்த்திக்ராஜா, உத்தப்பநாயக்கனுார் போலீசார் உயிரிழந்த மானை உத்தப்பநாயக்கனுார் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கால்நடை டாக்டர் மேனகா பரிசோதனை செய்தபின் மானின் உடலை வனப் பகுதிக்குள் புதைத்தனர்.

Advertisement