கோழிக்கு தடுப்பூசி
மதுரை: கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பிப். 14 வரை மருத்துவ நிலையங்களில் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 60 ஆயிரம் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இணை இயக்குநர் சுப்பையன் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ''அனைத்து வயது கோழிகளையும் கழிச்சல் நோய் தாக்கும். எட்டு வாரத்திற்கு மேற்பட்ட குஞ்சுகளுக்கு பாதிப்பு அதிகமாக ஏற்படும். வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் கோழி வளர்ப்போர் முகாம்களில் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement