ஏ.ஐ., செயலிகள், கருவிகளுக்கு தடை: ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் கட்டுப்பாடு
புதுடில்லி: மத்திய நிதியமைச்சகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலக சாதனங்களில் ஏ.ஐ., செயலிகள் மற்றும் கருவிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நவீன தொழில்நுட்ப யுகத்தில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ.,யின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது இல்லாத துறையே இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. ஏ.ஐ., பல்வேறு நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தினாலும், மோசடியாளர்கள் அதனை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சகத்தில் உள்ள அரசு சாதனங்களில் ஏ.ஐ., செயலிகள் மற்றும் கருவிகளை பயன்படுத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற செயலிகளினால், அரசு ஆவணங்கள் மற்றும் தகவல்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (3)
சிவம் - ,
05 பிப்,2025 - 17:39 Report Abuse
ஒப்பந்த ஊழியர்களை நிதி அமைச்சகத்தில் மட்டுமின்றி, உள்துறை, ராணுவம், வெளி உறவு போன்ற சில முக்கியமான அமைச்சகத்தில் கூட பணி அமர்த்துவது நாட்டுக்கு நல்லதல்ல.
0
0
Ray - ,இந்தியா
05 பிப்,2025 - 19:42Report Abuse
ஒடனே நிதி அமைச்சகத்தில் பரம்பரையா ஒட்டிக்கிட்டிருக்கும் / ஓட்டிக் கிட்டிருக்கும் 93 சதவிகிதம் நம்மாளுங்கள்லாம் ஓக்கியனுங்க ஒப்பந்த ஊழியர்கள்தான் களவாணிகள்னு பழிபோட்டு தப்பிக்க பாக்குறாங்க அப்படியானால் அவர்களை என்னாத்துக்கு நியமிக்கணும்? சாலை விபத்துக்கு டிரைவரை மாட்டிவிடுவதில்லையா அது போலத்தான்
0
0
Reply
கோமாளி - erode,இந்தியா
05 பிப்,2025 - 17:22 Report Abuse
அரசு துறைகளில் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களிடம் கவனம் தேவை. இவர்கள் தான் தகவல்களை கசிய விடுபவர்கள்.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement