டில்லியில் ஆட்சியை பிடிக்கிறது பா.ஜ.,: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

14

புதுடில்லி: டில்லியில் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.


மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. கடந்த இரண்டு தேர்தல்களில் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதால் இம்முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் பா.ஜ., தீவிரமாக பணியாற்றியது. 3வதுமுறையாக ஆட்சியை தக்க வைத்து கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்க ஆம் ஆத்மியும் களத்தில் தீவிரமாக பணியாற்றியது. இரண்டு கட்சிகளும் மாறி மாறி விமர்சனம் செய்தன. இதன் ஒரு புறம் இருக்க இண்டியா கூட்டணியில் இருந்த காங்கிரசும் தன் பங்கிற்கு களத்தில் இருந்தது.


தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் பெரும்பாலானவை, பா.ஜ., தான் ஆட்சியை பிடிக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.


என்டிடிவி - போல் ஆப் போல்ஸ்

பா.ஜ.,: 44

ஆம் ஆத்மி : 25

காங்.,: 1


ரிபப்ளிக் டிவி - மாட்ரிக்ஸ்



பா.ஜ.,:35-40

ஆம் ஆத்மி :32-37

காங்.,: 0-1


பீப்பிள்ஸ் பல்ஸ்

பா.ஜ.,:51-60

ஆம் ஆத்மி :10-19

காங்.,: 0



பீப்பிள்ஸ் இன்சைட்

பா.ஜ.,:40-44

ஆம் ஆத்மி :25-29

காங்.,: 0-1


பி- மார்க்


பா.ஜ.,:39-49

ஆம் ஆத்மி : 21-31

காங்.,: 0-1


ஏபிபி- சாணக்யா ஸ்ட்ராடஜிஸ்


பா.ஜ.,: 39-44

ஆம் ஆத்மி :25-28

காங்.,: 2-3



டைம்ஸ் நவ் நவ்பாரத் - ஜேவிசி


பா.ஜ.,: 39-45

ஆம் ஆத்மி: 22-31

காங்கிரஸ்: 0-2

மற்றவை : 0-1



போல் டைரி


பா.ஜ.,: 42 -50

ஆம் ஆத்மி :18-25

காங்.,: 0-2



டிவி ரிசர்ச்


பாஜ.,: 36-44

ஆம் ஆத்மி : 26-34

காங்கிரஸ் :0


இந்த முடிவுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement