எனக்கு திருப்தி அளிக்கும் மகன், மருமகளின் சேவை: கவுதம் அதானி மகிழ்ச்சி

4

புதுடில்லி:"எனது மகன் ஜீத்தும் மருமகள் திவாவும் தங்கள் திருமண வாழ்க்கையை ஒரு புனிதமான தீர்மானத்துடன் தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி கூறியுள்ளார்.

தொழிலதிபர் கவுதம் அதானியின் மகன் ஜீத் அதானி மற்றும் திவா ஷா திருமணம் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரபலங்கள் மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கவுதம் அதானி கூறியதாவது:எங்களது குடும்பத்தின் வளர்ச்சி சாமானிய தொழிலாளர் வர்க்கத்தை போன்றதாகும். ஜீத்தின் திருமணம் எளிமையான மற்றும் பாரம்பரிய முறைப்படி நடைபெறும்.

எனது மகன் ஜீத்தும் மருமகள் திவாவும் தங்கள் திருமண வாழ்க்கையை ஒரு புனிதமான தீர்மானத்துடன் தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இருவரும் ஒவ்வொரு ஆண்டும் 500 மாற்றுத்திறனாளி சகோதரிகளின் திருமணத்தில் ஒவ்வொரு சகோதரிக்கும் தலா ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்குவதன் மூலம் 'மங்கள சேவை' செய்ய உறுதியளித்துள்ளனர். ஒரு தந்தையாக, இந்த 'மங்கள சேவை' எனக்கு மிகுந்த திருப்தியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருகிறது. இந்த புனித முயற்சியின் மூலம், பல மாற்றுத்திறனாளி மகள்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கை மகிழ்ச்சி, அமைதி மற்றும் மரியாதையுடன் முன்னேறும் என்று நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த சேவைப் பாதையில் தொடர்ந்து முன்னேற ஜீத்தும் திவாவும் ஆசீர்வாதங்களையும் வலிமையையும் வழங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதானி கூறியுள்ளார்.

Advertisement