வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 6 பவுனை பறித்து காரில் தப்பிய கும்பல்
வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 6 பவுனை பறித்து காரில் தப்பிய கும்பல்
சேலம்: சேலம், சின்னதிருப்பதி மாருதி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 78. இவரது மனைவி திலகம், கல்வித்துறை துணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 3 மாதங்க
ளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகன் அருண்கார்த்திக், 43, பெங்களூரில் பணிபுரிகிறார். மகள் பிரசன்ன உதயா, 40, கணவர் இறந்ததால், தந்தை வீட்டில் வசிக்கிறார்.
நேற்று காலை கிருஷ்ணமூர்த்தியும், பிரசன்ன உதயாவும் நடைபயிற்சிக்கு சென்றனர். பயிற்சி முடித்துவிட்டு முதலில், பிரசன்ன உதயா வீட்டுக்கு வந்தார். வீடு திறந்திருந்தது. அவர் உள்ளே சென்றதும், அங்கிருந்த, 3 பேர் பிரசன்ன உதயாவை பிடித்து கட்டிப்போட்டனர்.
தொடர்ந்து வளையல், சங்கிலி என, 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு காரில் தப்பினர். பிரசன்ன உதயா, மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.
தொடர்ந்து கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். மோப்ப நாய் ஜூலி மூலம் சோதனை நடந்தது.
மேலும்
-
அமெரிக்க விசா விரைவாக கிடைக்க ஹனுமன் கோவிலில் குவியும் பக்தர்கள்
-
கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு : தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
அமெரிக்க அழுத்தத்தால் ஈரான் பணமதிப்பு சரிவு
-
மியான்மருக்கு மின்சாரத்தை நிறுத்தியது தாய்லாந்து
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஹமாஸ் ஒன்று கூடிய பயங்கரவாதிகள்
-
கார் மீது ஆட்டோ மோதல் சாலையில் டிராவிட் சண்டை