ஜீவா பப்ளிக் பள்ளியில் கலாஞ்சலி விழா


ஜீவா பப்ளிக் பள்ளியில் கலாஞ்சலி விழா

சேலம்,: சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டியில் உள்ள ஜீவா பப்ளிக் பள்ளியில், 11ம் ஆண்டு விழா, கலாஞ்சலி பெயரில் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் அங்கமுத்து தலைமை வகித்தார். தாளாளர் பத்மநாபன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பேச்சாளர் நாவரசி உமா தேவராஜன் பேசினார்.
விழாவில், 'இப்பள்ளி பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை குறித்த விபரங்கள் தேவைப்பட்டால், 94452 86686, 83000 33533 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என தெரிவிக்கப்பட்டது. இதில் பள்ளி செயலர் மணிவண்ணன், நிர்வாகிகள் செல்வராஜ், அன்பழகன், முரளி, மணி, சண்முகம், ஞானசேகரன், போலீஸ் துறையில் ஓய்வு பெற்ற, கூடுதல் கண்காணிப்பாளர்கள் பழனி, விவேகானந்தன், ஆடிட்டர்கள் பாலாஜி, கவுரி, ஆசிரியர்கள், பணியாளர்கள், குழந்தைகளுடன் பெற்றோர் பங்கேற்றனர்.
மேலும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் மின்னல் கொடி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement