கல்குவாரி அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு


கல்குவாரி அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு


பனமரத்துப்பட்டி :பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 13வது வார்டில், புறம்போக்கு இடத்தில் உள்ள கரட்டில், கல்குவாரி அமைக்க, இரு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாநில சுற்றுச்சூழல் மறு மதிப்பீடு ஆணையம் சார்பில், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது.
சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா, மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் வித்யலட்சுமி முன்னிலை வகித்தனர். அதில் கல்குவாரி அமைவிடம், பாறைகள், அதைச்சுற்றி உள்ள நீர்நிலைகள், சாலை வழித்தடம், பாறை வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்ட பரப்பளவு, அதன் மதிப்பீடு, காப்புக்காடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சுற்றுச்சுழல் ஆலோசகர் விளக்கினார். தொடர்ந்து, 6 பேர் கருத்து தெரிவித்தனர்.

Advertisement