கடை வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்


கடை வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்



ஓமலுார்: ஓமலுார் டவுன் பஞ்சாயத்தில், சாக்கடை கால்வாய், சிறு பாலம், புது சாலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றக்கோரி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்கனவே, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. நேற்று கடைவீதியில் உள்ள மஜீத் தெருவில், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை, பொக்லைன் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அருகே உள்ள தெருக்களில் கால்வாய் அமைக்க, ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சியில், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

**************************

Advertisement