விபத்தில் வாலிபர் பலி 2 பேர் படுகாயம்


விபத்தில் வாலிபர் பலி 2 பேர் படுகாயம்


மேட்டூர்: மேச்சேரி, வெள்ளாறு அடுத்த வெள்ளப்பட்டியை சேர்ந்த சேகர் மகன் சுமந்த், 21. நேற்று முன்தினம் இரவு வெள்ளாளம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நடந்த, நடன, நாட்டிய நிகழ்ச்சியை பார்த்தார். இரவு, 10:00 மணிக்கு ஸ்பிளண்டர் பைக்கில், சுமந்த், அவரது நண்பர்கள், 2 பேருடன், தொப்பூர் - ஈரோடு நெடுஞ்சாலை வழியே வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது தொப்பூரில் இருந்து மேட்டூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத லாரி, பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற, 3 பேரும் படுகாயம் அடைந்தனர். ஆனால் சுமந்த் நேற்று அதிகாலை, சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement