52 பவுன் திருட்டில்ஒருவர் சிக்கினார்


52 பவுன் திருட்டில்ஒருவர் சிக்கினார்


சங்ககிரி,: சங்ககிரி, நட்டுவம்பாளையம், சுப்புகவுண்டர் நகரை சேர்ந்த, ஓய்வு பெற்ற அரசு பள்ளியின் அலுவலக உதவியாளர் சுப்ரமணி. இவரது வீட்டில், கடந்த மாதம், 17ல் 52 பவுன் நகைகளை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் சங்ககிரி - திருச்செங்கோடு சாலையில் போலீசார் வாகனச்சோதனை செய்து கொண்டிருந்தபோது, பைக்கில் வந்தவரை நிறுத்தி, போலீசார் விசாரித்ததில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, ரயில்வே காலனியை சேர்ந்த தினேஷ்குமார், 24, என்பதும், 52 பவுன் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 4 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய மேலும் சிலரை தேடுகின்றனர்.

Advertisement