தினமலர் செய்தி எதிரொலி கால்நடை குடிநீர் தொட்டி சீரமைப்பு

கடம்பத்துார்:நமது நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால் பாப்பரம்பாக்கம் பகுதியில் கால்நடை குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டது.

கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது பாப்பரம்பாக்கம் ஊராட்சி.

இங்கிருந்து வெள்ளேரிதாங்கல் செல்லும்சாலையோரம், அரசு பள்ளி அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 2020-21ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.

இந்த கால்நடை தொட்டி சேதமடைந்து குடிநீர் வீணாகி வருவதோடு புற்கள் வளர்ந்துள்ளது என நமது நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின்படி ஊராட்சி நிர்வாகத்தினர் சேதமடைந்த கால்நடை குடிநீர் தொட்டியை சீரமைத்து புற்களை அகற்றி குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்தினர்.

Advertisement