நிலுவை பத்திரம் பெற முகாம்ரூ.16 லட்சம் வசூல்



நிலுவை பத்திரம் பெற முகாம்ரூ.16 லட்சம் வசூல்


ஓமலுார்,:ஓமலுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில், வருவாய் மீட்பு சட்டத்தில் நிலுவை பத்திரங்கள் பெற சிறப்பு முகாம் நேற்று நடந்தது. சேலம் துணை பதிவுத்துறை தலைவர் சுபிதாலட்சுமி தலைமை வகித்தார். அதில் ஓமலுார், மேச்சேரி, மேட்டூர், தாரமங்கலம் சார் - பதிவாளர் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் சேர்ந்து, முகாம் நடந்தது. இதில் மக்கள் பலரும் பணம் செலுத்தி, பத்திரங்களை பெற்றுக்கொண்டனர்.
நிலுவை முத்திரைத்தாள்கள் தீர்வு காணப்பட்டு, 16 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஓமலுார் சார் - பதிவாளர் அலுவலகம் மூலம் மட்டும், 12.50 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. மாவட்ட பதிவாளர் கனகராஜ்(நிர்வாகம்), முத்திரைத்தாள் தனி துணை கலெக்டர் ரவிச்சந்திரன், ஓமலுார் சார் பதிவாளர் பாஸ்கர் பங்கேற்றனர்.

Advertisement