40 அடி உயர கரும்புகையுடன் கழிவு எரித்ததால் மக்கள் அச்சம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848017.jpg?width=1000&height=625)
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை அருகே, கும்மிடிப்பூண்டி அடுத்த, பன்பாக்கம் கிராமத்தில் இருந்து, குருதானமேடு கிராமம் செல்லும் சாலை அமைந்துள்ளது. அந்த சாலைக்கும், அங்குள்ள பன்பாக்கம் ஏரிக்கும் இடையே, மலை போல் கழிவு குவிக்கப்பட்டிருந்தன. அதில், தொழிற்சாலை கழிவு, அதிக அளவில் இருந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம், அந்த கழிவை, மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது. மளமளவென பரவிய தீ, கட்டுக்கு அடங்காமல், கரும்புகையுடன், 40 அடி உயரத்திற்கு எரிந்தது. அருகில் உள்ள தனியார் ஐ.டி.ஐ., மற்றும் மாணவர் காப்பகத்தில் கரும்புகை சூழ்ந்ததால், மக்கள் அச்சம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த சம்பவம், பன்பாக்கம் கிராமத்தினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
மேலும்
-
அமெரிக்க விசா விரைவாக கிடைக்க ஹனுமன் கோவிலில் குவியும் பக்தர்கள்
-
கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு : தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
அமெரிக்க அழுத்தத்தால் ஈரான் பணமதிப்பு சரிவு
-
மியான்மருக்கு மின்சாரத்தை நிறுத்தியது தாய்லாந்து
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஹமாஸ் ஒன்று கூடிய பயங்கரவாதிகள்
-
கார் மீது ஆட்டோ மோதல் சாலையில் டிராவிட் சண்டை