'நல வாரிய தொழிலாளருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கவில்லை'



'நல வாரிய தொழிலாளருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கவில்லை'

ஆத்துார்:ஆத்துார், கோட்டையில், அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி பாக கிளை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமை வகித்தார். அதில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: வரும், 2026ல், அ.தி.மு.க., ஆட்சி அமைய தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். தி.மு.க., மீண்டும் பொய் கூறி ஓட்டு வாங்க முயற்சிக்கிறது. தமிழகத்தில், 18 நலவாரியங்கள் உள்ளன. இதில் கட்டுமானம் உள்ளிட்ட வாரிய தொழிலாளர்களுக்கு, அ.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 4 ஆண்டுகளாக, பொங்கல் பொருட்கள் வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி, ஆத்துார் நகர செயலர் மோகன், மாநில இலக்கிய அணி துணை செயலர் காளிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement