குத்து சண்டை போட்டி கும்மிடி மாணவன் அசத்தல்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த முனுசாமி - தீபா தம்பதியர் மகன் தேவா ஆகாஷ், 14. அங்குள்ள கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

அப்பகுதியில் உள்ள தனியார் பாக்சிங் கிளப்பில் குத்து சண்டை பயிற்சி பெற்று வருகிறார்.

மயிலாடுதுறையில், பள்ளி கல்வி துறை சார்பில், மாநில அளவில் நடந்த குடியரசு தின விழா குத்து சண்டை போட்டியில் பங்கேற்றார். அதில், 17 வயதுக்கு உட்பட்ட, 66 - 70 கிலோ எடை பிரிவில், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

வெற்றி பெற்ற மாணவன் தேவா ஆகாஷை, கலைமகள் பள்ளி முதல்வர் டாக்டர் திருஞானம், தாளாளர் தேன்மொழி, ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.

Advertisement