முதல்வர் இன்று நெல்லை பயணம்

சென்னை:முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக, இன்று திருநெல்வேலி செல்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, அரசு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அப்போது, அங்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

இன்று காலை விமானத்தில் துாத்துக்குடி செல்கிறார். அங்கிருந்து காரில் திருநெல்வேலி செல்கிறார். அங்கு கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 3,800கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டி.பி., சூரிய சக்தி மின்தகடு உற்பத்தி ஆலையை துவக்கி வைக்கிறார்.

தொடர்ந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் மறுநாள் துாத்துக்குடி சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

Advertisement