வரும் 11ல் வேல் யாத்திரை

உளுந்துார்பேட்டை:முருகன் கோவில் மலையை மீட்க வரும், 11ம் தேதி உளுந்துார்பேட்டையில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு வேல் யாத்திரை துவங்க உள்ளதாக, அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச்செயலர் பெரி செந்தில் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையை, ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி ஆய்வு செய்வதாகக் கூறி, மாமிசம் உண்டு ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த சம்பவத்தைக் கண்டித்தும், முருகன் மலையை புனிதப்படுத்தும் வகையிலும், வரும், 11ம் தேதி உளுந்துார்பேட்டையில் இருந்து திருப்பரங்குன்றம் முருகன் மலைக்கு, 'வெற்றிவேல், வீரவேல்' என்ற முழக்கத்துடன் வேல் யாத்திரை துவங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement