பிரேக் பிடிக்காமல் ஓடிய 'காலாவதி' அரசு டவுன் பஸ் 'கட்டையை போட்டு' நிறுத்திய இளைஞர்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848072.jpg?width=1000&height=625)
சிங்கம்புணரி:சிங்கம்புணரியில் பிரேக் பிடிக்காமல் கூட்டத்துக்குள் ஓடிய அரசு டவுன் பஸ்சை டூவீலரில் தொடர்ந்து கட்டையை போட்டு நிறுத்தினர்.
மதுரை மாவட்டம் மேலுார் டிப்போவில் இருந்து சிங்கம்புணரிக்கு நேற்று மதியம் 12:00 மணிக்கு அரசு டவுன் பஸ் வந்தது. பஸ் ஸ்டாண்டில் 15க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பஸ், நான்கு ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்ப முயன்ற போது பிரேக் பிடிக்காததை டிரைவர் உணர்ந்தார். விபத்தை தவிர்க்க நேராக காரைக்குடி ரோட்டில் பேருந்தை ஓட்டினார்.
பயணிகள் ஜன்னல் வழியாக தலையை நீட்டி காப்பாற்றக்கோரி கத்தினர். கண்டக்டர் பஸ்சிலிருந்து குதித்து காப்பாற்றுங்கள் என்று கத்திக் கொண்டே ஓடினார். அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கல்லுாரி மாணவர் நந்தபாலன் தனது தந்தை செந்திலுடன் ஒரு கட்டையை எடுத்துக்கொண்டு டூவீலரில் பஸ்சை விரட்டி சென்றார்.
இரண்டு இடங்களில் கட்டை போட்டும் பஸ் ஏறி இறங்கி சென்றுவிட்டது. சேவுகப் பெருமாள் கோயில் அருகே மூன்றாவதாக கட்டையை போட்டதும் பஸ் நின்றது. இந்த வழியாக பக்தர்கள் பழநி பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். ரோட்டின் ஒருபுறம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. மாணவர் அவரது தந்தையின் முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் வேறு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருப்புத்தூர், மேலூர், நத்தம் உள்ளிட்ட டிப்போக்களில் இருந்து இப்பகுதிக்கு இயக்கப்படும் பஸ்கள் பழுதுடன் இயக்கப்படுவதால் அடிக்கடி பிரேக் டவுன், விபத்துக்கள் நடக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு எஸ்.புதுார் மலைப்பாதையில் சென்ற டவுன் பஸ்சை நிறுத்த கண்டக்டர் கல்லை துாக்கிக்கொண்டு பின் தொடர்ந்தது, மற்றொரு பஸ் மலைப்பாதையில் ஏற முடியாததால், பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டு நடக்கவைத்து பிறகு ஏற்றிச் செல்லப்பட்டது, நேற்று பிரேக் பிடிக்காத பஸ் என சம்பவங்கள் அடுத்தடுத்து நடப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
அமெரிக்க விசா விரைவாக கிடைக்க ஹனுமன் கோவிலில் குவியும் பக்தர்கள்
-
கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு : தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
அமெரிக்க அழுத்தத்தால் ஈரான் பணமதிப்பு சரிவு
-
மியான்மருக்கு மின்சாரத்தை நிறுத்தியது தாய்லாந்து
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஹமாஸ் ஒன்று கூடிய பயங்கரவாதிகள்
-
கார் மீது ஆட்டோ மோதல் சாலையில் டிராவிட் சண்டை