பெட்ரோல் குண்டு வீச்சு வேடசந்துாரில் 3 பேர் கைது

வேடசந்துார்:திண்டுக்கல்மாவட்டம் வேடசந்துார் ஆத்துமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் புல்லட் ராஜா (எ) முத்துராஜா 44. அ.தி.மு.க., 5 ஆவது வார்டு கிளை செயலாளர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 42, என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்று மணிகண்டனின் மகன் கண்ணன் 20, முத்து ராஜாவிடம் தகராறில் ஈடுபட்டு தான் வைத்திருந்த பெட்ரோல் குண்டை அவரின் வீட்டில் வீசி உள்ளார். இதையடுத்து முத்துராஜா தனது நண்பரான வி.பூதிபுரத்தை சேர்ந்த கருப்புசாமி 42, என்பவருடன் சேர்ந்து, மணிகண்டன் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளார்.

கண்ணன், முத்துராஜா, கருப்புசாமியை வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி கைது செய்து சிறையில் அடைத்தார்.

Advertisement