எஸ்.பி., அலுவலகத்தில் மயங்கி விழுந்த வாலிபர்

கடலுார்; கடலுார் எஸ்.பி.,அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த வாலிபர், மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருத்துறையூரை சேர்ந்தவர் மகேந்திரன்,35. இவரை நேற்று முன்தினம் சிலர் தாக்கியதில் காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார். போலீஸ் வழக்கு என்பதால் சிகிச்சை அளிக்க மறுத்ததாக தெரிகிறது.

போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மகேந்திரன், நேற்று காலை எஸ்.பி., அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.

அப்போது அலுவலக வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எஸ்.பி., அலுவலகத்தில் வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement