8.83 லட்சம் பாஸ்போர்ட் 2024ம் ஆண்டில் வினியோகம்

1

பெங்களூரு; கர்நாடகாவில் கடந்த ஆண்டு 8 லட்சத்து 83 ஆயிரத்து 755 ஆயிரத்து பாஸ்போர்ட்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.

பெங்களூரு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கிருஷ்ணா அளித்த பேட்டி:

கடந்த 2023ம் ஆண்டு கர்நாடகாவை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் கேட்டு, பாஸ்போர்ட் மையங்கள், தபால் நிலையங்கள் வழியாக விண்ணப்பித்து இருந்தனர்.

அந்த ஆண்டில் 34,000 பாஸ்போர்ட்களை வினியோகம் செய்து இருந்தோம்.

கடந்த ஆண்டு 8 லட்சத்து 83 ஆயிரத்து 755 பாஸ்போர்ட்கள் வினியோகிக்கப்பட்டன. இது 2023ம் ஆண்டை காட்டிலும் 8 லட்சத்து 49 ஆயிரத்து 755 அதிகம். ஆண்கள் 4,88,509; பெண்கள் 3,95,236; மூன்றாம் பாலித்தனவர் 10 பேருக்கு பாஸ்போர்ட் கிடைத்து உள்ளது.

இதில் ஒருவர் 100 வயது உடையவர். எட்டு பேர் 96 முதல் 99 வயது உடையவர்கள். 8,668 பேர் 76 முதல் 95 வயதுக்கு உட்பட்டவர்கள். 16 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களில் 3,88,453 பேருக்கு பாஸ்போர்ட் கிடைத்தது.

பிப்ரவரி மாதம் அதிகபட்சமாக 78,416 பேருக்கு பாஸ்போர்ட் வினியோகித்தோம். அதிகபட்சமாக குவைத்திற்கு 7,284 பேர்; ஆஸ்திரேலியாவுக்கு 2,172 பேர் பயணித்து உள்ளனர்.

கர்நாடகாவில் 23 தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தினமும் 700 முதல் 800 விண்ணப்பங்கள் வந்தன.

கொரோனாவுக்கு பின், வெளிநாடுகள் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement