த.வா.க., நிர்வாகி மீது தாக்குதல்; விருதையில் பரபரப்பு

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் த.வா.க., நிர்வாகியை வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்தவர் பட்டுசாமி மகன் சேகர் (எ) ஞானசேகரன், 42. நகர்மன்ற கவுன்சிலர். த.வா.க., நகர செயலாளரான இவர், நேற்று மாலை வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரிந்த இருவர் வீடு புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், அவரது கையில் கத்தியால் கிழித்துவிட்டு தப்பியோடினர்.

காயமடைந்த ஞானசேகரன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

தகவலறிந்த அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement