திருப்பூரில் பஸ் கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அருகே செங்கப்பள்ளியில் கோவை - சேலம் பைபாஸில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பஸ்சில் பயணம் செய்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


விபத்துக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement