டில்லியில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம்; ராகுல், அகிலேஷ் பங்கேற்பு

19


புதுடில்லி: யு.ஜி.சி., புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி டில்லியில் தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் யு.ஜி.சி., வரைவு விதிகளை திருத்தம் செய்ய தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், யு.ஜி.சி., விதிகளை திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தி.மு.க., மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எம்.பி., கனிமொழி உள்ளிட்ட தி.மு.க., எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல, காங்., வி.சி.க., கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி.க்களும் பங்கேற்றனர். அப்போது, , பல்கலைக்கழக மானிய குழு வரைவு விதிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Advertisement