கேரளாவில் 3 புலிகள் உடல் மீட்பு; இறப்பின் பின்னணி குறித்து விசாரணை

1


திருவனந்தபுரம்: கேரளாவில் மூன்று புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. உடல்களை மீட்ட வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் வயநாட்டில், குறிச்சியாத் வனப்பகுதியில் இரண்டு புலிகள் இறந்து கிடந்தன. மற்றொரு புலியின் உடல் வைத்திரி வனப்பகுதியில் காப்பி தோட்டம் அருகே கிடந்தது. உயிரிழந்த மூன்று புலிகளின் உடல்களை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். புலிகள் இறப்பிற்கான காரணங்களை கண்டறிய வனத்துறை அமைச்சர் சுசீந்திரன் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளார். எட்டு பேர் கொண்ட குழுவில், வன பாதுகாவலர் தீபா தலைமை தாங்குகிறார்.



மூன்று புலிகளின் மரணத்திற்குப் பின்னால் ஏதேனும் மர்மம் உள்ளதா அல்லது யாரேனும் வேண்டுமென்றே செய்த செயலா என்பது குறித்து தனிப்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என வனத்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.


சமீபத்தில், காபி கொட்டைகளைப் பறித்துக் கொண்டிருந்த பழங்குடியினப் பெண் ஒருவர் புலியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்தப் பெண்ணைக் கொன்ற புலி இரண்டு நாட்களுக்குப் பிறகு, சடலமாக மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement