பிரேக்கப் செய்த காதலி; இன்ஸ்டாவில் அவதூறு பரப்பிய காதலன் கைது

கோவை: மேட்டுப்பாளையம் அருகே முன்பு போல் பேசுவதை தவிர்த்து வந்த காதலி குறித்து இன்ஸ்டாவில் அவதூறு பரப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.


மேட்டுப்பாளையம் கணுவாய் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விமல் குமார். கல்லூரி பயின்று வரும் இவர், தன்னுடன் படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மாணவி பேசுவதை குறைத்துக் கொண்டதால், விமல்குமார் அதிருப்தியடைந்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் போலியாக 10 முதல் 15 அக்கவுண்டுகளை தொடங்கி, மாணவி குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.


இதனால், அதிர்ந்து போன மாணவி தரப்பினர், இது பற்றி கோவை மாநகர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், பெண்ணின் மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தி வந்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விமல்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.

Advertisement