நெருப்புக்கோழி போன்ற டைனோசர்

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூமியில் பல வகையான உயிரினங்கள் வாழ்ந்தன. பல்வேறு காரணங்களால் அவை அழிந்து போயின. அவற்றுள் முக்கியமான ஒன்று டைனோசர். பல்வேறு இனங்களைச் சேர்ந்த டைனோசர்களின் தொல்லெச்சங்கள் உலகம் முழுதும் கிடைத்துள்ளன. சமீபத்தில் மெக்சிகோ நாட்டில் முற்றிலும் வித்தியாசமான தோற்றம் கொண்ட ஒரு டைனோசரின் தொல்லெச்சம் கிடைத்துள்ளது. இது, 7.3 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது என்று தொல்லியலாளர்கள் கணித்துள்ளனர். இது ஆர்னிதோமிமிடே (Ornithomimidae) குடும்பத்தைச் சேர்ந்தது.

இது 10 அடி உயரம் வரை வளர்ந்திருந்தது. பறவைகளைப் போல் அலகு நீண்டிருந்தது. இது தாவர உண்ணியாகவோ, அனைத்துண்ணியாகாவோ இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் மண்டை ஓடு சிறியது, லேசானது. கழுத்து நீண்டது, முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறிவிட்டன. உறுதியான பின்னங்கால்கள் பூமியில் நடக்க உதவின. இது பார்ப்பதற்கு அப்படியே இன்றைக்கு உள்ள நெருப்புக் கோழிபோல் இருந்துள்ளது.

Advertisement