சிட்டி பள்ளி யு - 16 கிரிக்கெட் பி.எஸ்.பி.பி., மில்லினியம் அபாரம்

சென்னை, டி.என்.சி.ஏ., சார்பில், சிட்டி பள்ளிகளுக்கு இடையிலான, யு - 16 கிரிக்கெட் போட்டிகள், நகரில் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.

நேற்று முன்தினம், மேலக்கோட்டையூர் முருகப்பா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில், கெருகம்பாக்கம் பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளி, 50 ஓவர்களில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 238 ரன்களை அடித்தது. அணியின் வீரர்கள் அனிருத் 59, ஸ்ரீநாத் குமார் 52 ரன்கள் அடித்தனர்.

அடுத்து களமிறங்கிய கொரட்டூர் எபினேசர் பள்ளி, 35.5 ஓவர்களில், 'ஆல் அவுட்' ஆகி, 137 ரன்களை அடித்தது. பி.எஸ்.பி.பி., வீரர் ரியான், 35 ரன்களை கொடுத்து, 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

ரெட்ஹில்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் மற்றும் கொளப்பாக்கம் லாலாஜி ஒமேகா பள்ளிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த செயின்ட் பீட்ஸ், 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 160 ரன்களை அடித்தது. எதிர் அணியின் வீரர்கள் ஹரிஷ் நாராயணன் மற்றும் தேவேஷ், தலா ஐந்து விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர்.

அடுத்து பேட்டிங் செய்த லாலாஜி ஒமேகா பள்ளி, 38 ஓவர்களில், 'ஆல் அவுட்' ஆகி, 103 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

Advertisement