அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணம் மினி பஸ் ஓனர்கள் ஏற்க மறுப்பு
சென்னை:'புதிய மினி பஸ் திட்டத்தில், டீசல் விலைக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்' என, மினி பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மினி பஸ்களில், 0 - 2 கி.மீ.,க்கு 2 ரூபாய்; 2 - 4 கி.மீ.,க்கு 4 ரூபாய்; 4 - 6 கி.மீ.,க்கு 5 ரூபாய்; 6 - 8 கி.மீ., 6 ரூபாய்; 8 - 10 கி.மீ., 7 ரூபாய்; 10 - 12 கி.மீ., 8 ரூபாய்; 12 - 18 கி.மீ., வரை 9 ரூபாய்; 18 - 20 கி.மீ.,க்கு 10 ரூபாய் என, அரசால் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டன.
'இந்த கட்டணத்தை ஏற்க முடியாது. டீசல் விலைக்கு ஏற்ப, மினி பஸ் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, மினி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் 1 கி.மீ., பயணத்திற்கு, 56 காசு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில், 1.16 ரூபாய் கட்டணம்.
தற்போதுள்ள டீசல் விலைக்கு ஏற்ப, கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். எங்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்று, நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வேங்கைவயல் போல மற்றொரு சம்பவம்: திருச்சி தண்ணீர் தொட்டியில் மலம் வீச்சு
-
தொகுதி சீரமைப்பால் தமிழகத்துக்கு பாதிப்பு: கேரளாவில் உதயநிதி பேச்சு
-
வாய்க்கு வந்ததை பேசினால் சிக்கல் தான்: நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
-
தி.மு.க.,வும் பா.ஜ.,வும் ஒன்று நடிகர் விஜய் ஆவேச தாக்கு
-
எதிர்க்கட்சிகள் திசை திருப்புவதாக மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
-
மூன்று மாதங்களாக உதவித்தொகை நிறுத்தம்: மாற்றுத்திறனாளிகள் அவதி