பஞ்சுபேட்டை கால்வாய் துார்வார கோரிக்கை

பஞ்சுபேட்டை:காஞ்சிபுரம் ஒன்றியம், கருப்படிதட்டடை ஊராட்சி, பஞ்சுபேட்டையில் உள்ள மாநில அரசு விதைப்பண்ணை விவசாய நிலம் மற்றும் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் மண்டி கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.

இதனால், மழைநீர் முழுமையாக வெளியேறாமல் கால்வாயில் தேங்கியுள்ளது. பலத்த மழை பெய்தால் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியை சூழும் நிலை உள்ளது.

எனவே, கருப்படிதட்டடை ஊராட்சியில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் மண்டியுள்ள செடி, கொடிகளை அகற்றி, மண்கால்வாயை கான்கிரீட் கால்வாயாக அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement