ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரவக்குறிச்சி,: அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.அரவக்குறிச்சி பேரூராட்சி சார்பாக, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம், மஞ்சள் பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தலைமை வகித்தார். மகிழ்முற்றம் செயலாளர் ஆசிரியர் சகாயவில்சன், 'மஞ்சள் பை பயன்படுத்துவதால், இயற்கையை பாதுகாக்கும் முறைகள் பற்றியும், பாலிதீன் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, சுகாதார கேடுகள் மற்றும் கேன்சர் போன்ற நோய்கள்' ஏற்படுவது பற்றியும் எடுத்து கூறினார்.
பட்டதாரி ஆசிரியர் ஷகிலாபானு, 'நெகிழிப்பைகள் கால்நடைகளையும், குடிநீர் ஆதாரங்களையும் பாதிப்படைய செய்கிறது. நெகிழிப்பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து, அனைவரும் மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும்' என்றார். பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன், செயல் அலுவலர் செல்வராஜ், பேரூராட்சி மேற்
பார்வையாளர்கள் அருள் மற்றும் ஷேக் பங்கேற்றனர்.ஆசிரியர் கதிரேசன் நன்றி கூறினார்.