காங்கிரஸ் தர்ணா போராட்டம்

மூணாறு : கேரளாவில் ரேஷன் பொருட்கள் முடங்கியதை கண்டித்து காங்கிரஸ் ஒன்றிய குழு தலைமையில் மாநிலம் முழுவதும் வழங்கல் துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடந்தது.

அதன்படி தேவிகுளம் ஒன்றிய குழு தலைமையில் தேவிகுளம் தாலுகா வழங்கல் துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.

ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

காங்., மாவட்ட தலைவர் மாத்யூ துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. மணி, காங்., மாவட்ட பொது செயலாளர்கள் முனியாண்டி, சலீம்குமார், அர்ஜூனன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, ஜெயராஜ், மூணாறு பகுதி தலைவர் நெல்சன், ஐ.என்.டி.யு.சி. வட்டார தலைவர் குமார், ஊராட்சி துணைத் தலைவர் பாலசந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக அப்பகுதியில் ஊர்வலம் நடந்தது.

Advertisement