கணவர் மாயம்;மனைவி புகார்
கணவர் மாயம்;மனைவி புகார்
குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் கவிதா, 38. இவருடைய கணவர் கருணாநிதி, 42. இவர், வீட்டின் அருகில் உள்ள கவியரசு என்பவரிடம் கடனாக பணம் பெற்றார். அதை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த, 5 இரவு 7:00 மணியளவில் கடைக்கு சென்ற கருணாநிதி திரும்ப வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்க வில்லை. இதுகுறித்து கவிதா கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement